சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விசேட மருத்துவ நிபுணர் அனில் ஜயசிங்கவை, ஜனாதிபதி அநுரகுமார நியமித்துள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவால் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜயசிங்கவுக்கு இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
கொரோனா பேரிடர் காலத்தில் சுகாதார திணைக்களப் பணிப்பாளராக அனில் ஜயசிங்க பணியாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.