My WordPress Blog

வரவு – செலவுத் திட்டத் தயாரிப்பை தொடங்கினார் அநுர

3

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை தயாரிப்பதற்கான அமைச்சரவை மட்டத்திலான ஆரம்ப கலந்துரையாடல்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


அதன் ஒரு அங்கமாக கல்வி அமைச்சின் செலவுத் தலைப்பு தொடர்பிலான வரவு செலவு திட்ட யோசனைகள் குறித்த கலந்துரையாடல் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.


கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி அமைச்சர் மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய, கல்வி, உயர்கல்வி, தொழில் கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, கல்வி அமைச்சின் செயலாளர் நாலக்க கலுவௌ உட்பட அமைச்சுக்களின் அதிகாரிகள் பலர் இதன்போது கலந்துகொண்டிருந்தனர்.

Leave A Reply

Your email address will not be published.