நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா மற்றும் அவரது சுயேச்சைக் குழுவில் போட்டியிட்ட கௌசல்யா நரேன் இருவரும் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இன்று காலை முற்படுத்தப்பட்டு இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா மற்றும் கௌசல்யா இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார்.
அதற்கு அமைவாக நாடாளுமன்ற உறுப்பினர் இ.அர்ச்சுனா மற்றும் கௌசல்யா இருவரிடமும் நேற்றிரவு வாக்குமூலம் பெற்ற பொலிஸார், நீதிமன்றில் இன்றைய தினம் முற்படுத்தினர் .
இதன்போது நீதிவான், மருத்துவமனைக்குள் உரிய அனுமதியைப் பெற்றுச் செல்லுமாறு வழிப்படுத்தியதுடன் வேறு சில வழிகாட்டல்களையும் வழங்கினார்.
முறைப்பாட்டாளரான மருத்துவமனைப் பணிப்பாளர் சார்பில் சட்டத்தரணி குமாரவடிவேல் குருபரனும், நாடாளுமன்ற உறுப்பினர் இ.அருச்சுனா சார்பில் சட்டத்தரணி வி.எஸ்.தனஞ்சயனும் மன்றில் முன்னிலையாகியிருந்தனர்.