My WordPress Blog

கடற்கரையில் ஒதுங்கிய இராட்சத திமிங்கிலம்

5

தமிழகத்தின் இராமநாதபுரம் அருகே பாம்பன் கடற்கரையில் 2 தொன் எடையும் 18 அடி நீளமும் கொண்ட இராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது.


மன்னார் வளைகுடா கடற்பரப்பில் அரிய வகை கடல்வாழ் உயிரினங்கான கடல் பசு, திமிங்கலம், சுறா, டொல்பின், கடல் குதிரை, கடல் பல்லி என்பன வசிக்கின்றன.
இந்த நிலையில் நேற்றுக் காலை இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தெற்கு மீன்பிடி துறைமுகத்துக்கு அருகே கடற்கரையில் இராட்சத திமிங்கலம் இறந்த நிலையில் கரை ஒதுங்கி இருப்பதை மீனவர்கள் கண்டனர். இது தொடர்பில் அதிகாரிகளுக்கு அவர்கள் தகவல் வழங்கினர்.


கரையொதுங்கிய திமிங்கலம் நீல திமிங்கல வகையைச் சேர்ந்தது என்றும் இது 118 அடி நீளம் வரை வளரக்கூடியது எனவும் ஆனால் தற்போது இறந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம் நீலத்திமிங்கலத்தின் குட்டியாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave A Reply

Your email address will not be published.