அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பயணித்த வாகனம், புத்தளம் வென்னப்புவவில் பெண் பாதசாரியை மோதியதில் அவர் உயிரிழந்ததாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
70 வயதுடைய யாசகம் செய்யும் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று பிற்பகல் கொழும்பு புத்தளம் வீதியில் போலவத்தை சந்தியில் இடம்பெற்ரற இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த பெண், மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினரின் சாரதியான 60 வயதுடைய நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.