யாழ்ப்பாணத்தில் பரவி வரும் ஒரு வகை காய்ச்சல் காரணமாக இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறை, கரவெட்டி, சாவகச்சேரி ஆகிய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவிலேயே உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மழை வெள்ளம் தேங்கி நின்ற பகுதிகளில் இந்த காய்ச்சல் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் நிலைமை எலிக்காய்ச்சலை ஒத்ததாக இருந்தாலும் அதைத்தாண்டி வேறு சில வைரஸ்களும் குடாநாட்டில் பரவி வருவதாக சில மாதிரிகள் தென்படுவதால் சுகாதாரத்துறையினர் உசாரடைந்து தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.
கொழும்பு தொற்றுநோய் தடுப்புப் பிரிவிலிருந்து இரண்டு அதிகாரிகள் குழுக்கள் இன்றும், நாளையும் யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்து ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன என வடக்கு மாகாண ஆளுநர் ஊடகப் பிரிவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.