முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகனுக்குச் சொந்தமான வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட 6 கோடி ரூபா பெறுமதியான, பதிவு செய்யப்படாத பி.எம்.டபள்யூ. ரக கார் மற்றும் மிட்சுபிசி ரக ஜீப் வண்டிகள் திருடப்பட்டவை என அரச இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இவை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்யாது, பல சந்தர்ப்பங்களில் வாகனங்களின் பாகங்களாக இறக்குமதி செய்து சட்டவிரோதமாக இணைக்கப்பட்டுள்ளதுடன், அவற்றின் வர்ணம் மாற்றியமைக்கப்பட்டு செஸி இலக்கத்தை போலியாக பொருத்தியுள்ளதாக இரசாயன பகுப்பாய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது கண்டியில் பிரபல வாகன நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் குடும்பத்தின் உறுப்பினரான இசுறு சேரம் எனும் ரோஹித அபேகுணவர்தனவின் மருமகன் தலைமறைவாகியுள்ளார்.