My WordPress Blog

தேர்தலுக்கு மன்னார் மாவட்டம் தயார்

8

தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு

நாளை இடம்பெறவுள்ள 17ஆவது பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் மன்னார் மாவட்டத்தில் முழுமைபெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க.கனகேஸ்வரன் தெரிவித்தார்.


மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று புதன்கிழமை மதியம் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டார்.


’90 ஆயிரத்து 607 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இவர்களுக்காக 98 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கான வாக்குப்பெட்டிகள் இன்று காலை அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. 290 பொலிஸார், 77 சிறப்பு அதிரடிப்படையினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஆயிரத்து 603 அரச பணியாளர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபட்டுள்ளனர்’ என்றார்.

Leave A Reply

Your email address will not be published.