My WordPress Blog

தமிழர் தாயகத்தில் வாக்களிப்பு மந்தம்

4

நாடாளுமன்றத் தேர்தலுக்கு வாக்களிப்பதில் மக்கள் பெரியளவில் ஆர்வம் காண்பிக்கவில்லை எனத் தெரியவருகின்றது. இன்று பி.ப. 2 மணி வரையில் நாடளாவிய ரீதியில் 40 தொடக்கம் 45 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. தமிழர் தாயகப் பிரதேசங்களில் அந்த நிலைமை இன்னமும் மோசம் எனத் தெரியவருகின்றது.

யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்தில் பி.ப. 3 மணி வரையில் 47 சதவீத வாக்குகளே பதிவாகியுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் பி.ப. 2 மணி வரையில் 46 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. வன்னித் தேர்தல் மாவட்டத்திலும் 45 சதவீத வாக்கே பதிவாகியுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.