My WordPress Blog

வடக்கு தெற்கை ஒன்றிணைக்கும் ஆட்சி

6

வாக்களித்த பின்னர் அநுர தெரிவிப்பு

வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கை ஒன்றிணைக்கும் ஆட்சியை அமைப்போம் என நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று முற்பகல் மருதானை பஞ்சிகாவத்த அபயசிங்காராமவில் தனது வாக்கை அளித்தார்.

வாக்களித்த பின்பு ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, தேசிய மக்கள் சக்தி வலுவான நாடாளுமன்றத்தை அமைக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

மக்களுக்கு ஏற்புடையதான சட்டங்களை நிறைவேற்றி, புதிய நாடாளுமன்ற கலாசாரத்தை உருவாக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஜனாதிபதி தேர்தல் வெற்றியின் பின்னர் நாட்டில் காணப்பட்ட ஜனநாயக ரீதியிலான சுதந்திரத்தை இனிவரும் தேர்தல் காலங்களிலும் எதிர்பார்ப்பதாகவும், தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் மக்கள் அதை உணர்ந்துள்ளனர் என்றும் அதனையே இந்நாட்டின் தேர்தல் கலாசாரமாக மாற்ற எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.