My WordPress Blog

தேசிய மக்கள் சக்தி அதிகூடிய வாக்குகளுடன் முன்னிலை

4

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் தபால்மூல வாக்களிப்பு முடிவுகள் இதுவரை வெளியாகியுள்ளன. இதுவரை தேசிய ரீதியில் தேசிய மக்கள் சக்தி 57 ஆயிரத்து 72 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 6 ஆயிரத்து 492 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இதுவரை காலி மாவட்டம் மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் முடிவுகள் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன.

காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 32 ஆயிரத்து 296 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 3 ஆயிரத்து 523 வாக்குகளையும், தேசிய ஜனநாயக முன்னணி ஆயிரத்து 964 வாக்குகளையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆயிரத்து 846 வாக்குகளையும் பெற்றுள்ளன.

இரத்தினபுரி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 24 ஆயிரத்து 776 வாக்குகளையும், ஐக்கிய மக்கள் சக்தி 2 ஆயிரத்து 969 வாக்குகளையும், தேசிய ஜனநாயக முன்னணி ஆயிரத்து 528 வாக்குகளையும், சிறிலங்கா பொதுஜன பெரமுன ஆயிரத்து 31 வாக்குகளையும் பெற்றுள்ளன.

Leave A Reply

Your email address will not be published.