My WordPress Blog

சத்தியலிங்கம் ‘பலிக்கடா” மாத்திரமே

9

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் தேசியப் பட்டியல் ஆசனம் கட்சியின் பதில் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கத்துக்கு வழங்கப்பட்டுள்ளமையானது, தற்காலிகமானது என அந்தக் கட்சியின் சார்பில் வன்னித் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்ட சட்டத்தரணி செல்வராஜா டினேசன் தெரிவித்துள்ளார்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் வன்னி மாவட்டத்தில் போட்டியிட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிக்கு ஓர் ஆசனம் மாத்திரமே கிடைத்தது. விருப்பு வாக்குப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் மன்னாரைச் சேர்ந்த சட்டத்தரணி செல்வராஜா டினேசன். இந்தத் தேர்தலில் விருப்பு வாக்குப் பட்டியலில் 5ஆம் இடத்திலுள்ள கட்சியின் பதில் பொதுச் செயலர் ப.சத்தியலிங்கத்துக்கு தேசியப் பட்டியல் ஆசனம் வழங்கப்பட்டமை தொடர்பில் பரவலாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் சட்டத்தரணி செ.டினேசன் தனது முகநூலில்,
‘இலங்கை தமிழரசு கட்சி துரோகங்களால் நிறைந்தது…!
இலங்கை தமிழரசு கட்சிக்கான தேசியப்பட்டியல் ஆசனம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக வைத்தியர் சத்தியலிங்கம் அவர்களிடம் கொடுத்து வைக்கப்பட்டுள்ளது. அவ்வளவுதான்..!’ என்று பதிவிட்டுள்ளார்.

Leave A Reply

Your email address will not be published.