ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவால் புதிய அமைச்சர்களுக்கான நியமனம் இன்று காலை வழங்கி வைக்கப்பட்டது. அதில் காணி அமைச்சு, தேசிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர் லால் காந்தவுக்கு வழங்கப்பட்டுள்ளது. அவர் இனவாதி என மனித உரிமைச் செயற்பாட்டாளர் ஐங்கரன் விமர்சித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ளதாவது,
‘இலங்கையின் இனப்பிரச்சினையில், காணி (காணிப்பங்கீடு, காணி நிர்வாகம், மற்றும் நில – காணி அதிகரிப்பு) மிகவும் முக்கியமானது. இத்தகையதொரு கூருணர்வு மிக்க விடயப்பரப்பிற்குரிய அமைச்சுப் பொறுப்பை இனவாதியும், ஒழுக்கமற்றவருமான லால் காந்தவுக்கு வழங்கப்பட்டிருப்பதானது கரிசனைக்குரிய விடயமாகும். மக்கள் விடுதலை முன்னணி பங்காளிகளாக இருந்த அரசாங்கங்கள் உட்பட, கடந்த கால அரசாங்கங்களால் நிகழ்ந்த அநீதிகளை சரி செய்ய அவர் பொருத்தமானவரா என்ற சந்தேகம் எழுகின்றது, என்று குறிப்பிட்டுள்ளார்.