தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்து உயர் நீதிமன்றம் இன்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
புலமைப்பரிசில் பரீட்சையின் மூன்று வினாக்கள் முற்கூட்டியே வெளியானமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து, அந்த மூன்று வினாக்களுக்கும் மாணவர்களுக்கு புள்ளிகளை வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறானதொரு நிலைமையிலேயே நீதிமன்றால் பரீட்சை பெறுபேறுகளை வெளியிட இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.