17ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய கடமைகளை ஆரம்பித்தார்.
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 17 ஆவது பிரதமராக கலாநிதி ஹரினி அமரசூரிய இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டதையடுத்து பிளவர் வீதியிலுள்ள பிரதமர் அலுவலகத்துக்குச் சென்று கடமைகளை ஆரம்பித்தார்.