நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியது. நாடு முழுவதிலும் மக்கள் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றுள்ளதை காணமுடிகின்றது.
இன்று மாலை வேளையில் நாடு முழுவதும் மழையுடனான காலநிலை நிலவும் என்று முன்னறிவிப்புச் செய்யப்பட்டுள்ளமையினால் மக்கள் நேரத்துடன் சென்று வாக்களிப்பது பொருத்தமாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.