வாக்குச்சாவடியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சாவு
தேர்தல் கடமையிலிருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் தேர்தல் கடமையிலிருந்தபோது அவர் உயிரிழந்துள்ளார்.