9 வயது மாணவனை பல முறை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 38 வயதான ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
நேற்றைய தினம் (13.11.2024) மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டார்.
மாணவனை பாடசாலையின் மலசல கூடத்துக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.