My WordPress Blog

மன்னாரில் 14% வாக்களிப்பு

வன்னித் தேர்தல் மாவட்டத்தின் மன்னார் நிர்வாக மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 90 ஆயிரத்து 607 வாக்காளர்களில் 13 ஆயிரத்து 82 பேர் காலை 10.15 மணி வரையில் வாக்களித்துள்ளனர். இது 14.43 சதவீதமாகும்.

சிறீதரன் வாக்களிப்பு

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் யாழ். தேர்தல் மாவட்ட முதன்மை வேட்பாளரும், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் இன்று காலை கிளிநொச்சி மாயவனூர் வித்தியாலயத்தில் வாக்களித்தார்.

முல்லைத்தீவில் 19ஆயிரம் பேர் வாக்களிப்பு

வன்னித் தேர்தல் மாவட்டத்தின் முல்லைத்தீவு நிர்வாக மாவட்டத்தில் இன்று காலை 10 மணி வரையில் 18 ஆயிரத்து 873 பேர் வாக்களித்துள்ளனர். இது வாக்களித்தகுதியானவர்களில் 23.23 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குச்சாவடியில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் திடீர் சாவு

தேர்தல் கடமையிலிருந்த தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் 32 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

வாக்களிப்பு ஆரம்பம்

நாடாளுமன்ற பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு சற்று முன்னர் ஆரம்பமாகியது. நாடு முழுவதிலும் மக்கள் காலையிலேயே வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்றுள்ளதை காணமுடிகின்றது. இன்று மாலை வேளையில் நாடு முழுவதும் மழையுடனான காலநிலை நிலவும் என்று

மாணவன் துர்நடத்தை; ஆசிரியர் கைது

9 வயது மாணவனை பல முறை பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் கைதான 38 வயதான ஆசிரியரை விளக்கமறியலில் வைக்குமாறு சம்மாந்துறை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. நேற்றைய தினம் (13.11.2024) மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கு

வாக்காளருக்கு இலஞ்சம் கொடுக்க முயன்றோர் மாட்டினர்

மன்னாரில் வாக்காளர்களுக்கு அரசியல் கட்சியால் வழங்குவதற்கு என கொண்டு செல்லப்பட்ட ஒரு தொகுதி உலர் உணவு பொருட்கள் நேற்று மாலை மன்னார் - யாழ் பிரதான வீதியில் வைத்து அடம்பன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. சந்தேகநபர்கள் மூவர் இதன்போது கைது

வடக்கில் புதிய நியமனம்

வடக்கு மாகாண போக்குவரத்து பயணிகள் அதிகார சபையின் தலைவராக, யாழ் மாவட்ட முன்னாள் திட்டமிடல் பணிப்பாளர் க.மகேஸ்வரன் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் நேற்று நியமிக்கப்பட்டார்.

விவசாயம், கல்விக்கு நெதர்லாந்து நிதி உதவி

இந்நாட்டில் விவசாயம், கல்வி, சுற்றுலா மற்றும் பொதுச் சேவை மேம்பாட்டுக்கு தேவையான தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி வசதிகளை வழங்க நெதர்லாந்து அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. நெதர்லாந்தின் இலங்கைக்கான பிரதித் தூதுவர் இவான் ருட்ஜென்ஸ்