யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பிரபல ‘ரப்’ பாடகர்கள் மூவர் மூன்று தினங்களுக்கு முன்னர் வவுனியா பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வவுனியாவைச் சேர்ந்த ஒருவரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகத் தெரிவித்து ஒரு கோடியே 69 லட்சம் ரூபா பணத்தை மோசடி செய்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
தாம் வெளிநாடுகளுக்குச் செல்லும் இசை நிகழ்சிகளுக்கு பக்கவாத்திய கலைஞர் என்ற போர்வையில் அழைத்துச் செல்வதாகத் தெரிவித்து பணத்தை இவர்கள் பெற்றுக்கொண்டதாக, முறைப்பாடு மேற்கொண்டவர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ரப் சிலோன் சிங்கர்’ஸ் என்ற பெயரில் இவர்கள் பிரபலமாகினர்.
இவர்களுக்கு தமிழகத்தில் மாத்திரமல்ல புலம்பெயர்ந்த தமிழர்கள் வசிக்கும் பல்வேறு நாடுகளிலும் தமிழ் மக்கள் மத்தியில் பேராதரவு உண்டு. அவர்கள் அங்கும் சென்று இசை நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.