சந்திரசேகரனுக்கு அமைச்சு, பவானந்தராஜாவுக்கு பிரதி அமைச்சு
ஜனாதிபதி செயலகத்தில் நாளை காலை 10 மணிக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டிய யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் முன்னாள் பிரதிப் பணிப்பாளர் மருத்துவர் சிறிபவானந்தராஜாவுக்கு பிரதி அமைச்சுப் பதவி வழங்கப்படக் கூடும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சந்திரசேகரனுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படக்கூடும் எனத் தெரியவருகின்றது.