புத்தளம் மாவட்டத்தில் தீவிரமாகப் பரவிச் செல்லும் ஒருவகையான நோய் காரணமாகத் தெங்கு செய்கை பாதிக்கப்பட்டுள்ளது.
வெள்ளை ஈ, சிவப்பு மற்றும் கருப்பு வண்டுகள் காரணமாக தமது செய்கை பாதித்துள்ளதாகத் தெங்கு செய்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
சந்தையில் தேங்காய் விலை நாளாந்தம் அதிகரித்துச் செல்கின்ற நிலையில், இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.